Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமேசுவரம் .. 7-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை

ராமேசுவரம் .. 7-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை

By: vaithegi Wed, 10 Aug 2022 08:16:15 AM

ராமேசுவரம்   ..  7-வது நாளாக  மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை

ராமேசுவரம் : வங்கக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மிக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகிறது.

ban on fishing,rameswaram ,மீன் பிடிக்க தடை , ராமேசுவரம்

இதனை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி போன்ற மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் 7-வது நாளாகவே விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

Tags :