Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று காலை ராமேசுவரம் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர்

இன்று காலை ராமேசுவரம் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர்

By: vaithegi Sat, 30 July 2022 11:05:54 AM

இன்று காலை ராமேசுவரம் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர்

ராமேசுவரம்: ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு படகில் சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் எல்லைதாண்டி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்ததாக கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர்களையும் விடுவிக்க கோரி கடந்த 24-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கொண்டு வந்தனர். ராமேசுவரம் பஸ் நிலையப்பகுதியில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

rameswaram,pisces ,ராமேசுவரம் ,மீனவர்கள்

மேலும் மானிய விலையில் வழங்கப்படும் டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் 1500 பேர் கடந்த 6 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால் ரூ.4 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மீனவர் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை நேற்றுடன் வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து இன்று காலை ராமேசுவரம் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றது குறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சகாயத்திடம் கேட்டபோது, மத்திய-மாநில அரசு அதிகாரிகள் வருகிற 4-ந் தேதி 6 மீனவர்களையும் விடுவிப்பதாக உறுதியளித்து உள்ளனர். எனவே போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார்.

Tags :