Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்புக்குரிய ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து

ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்புக்குரிய ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து

By: Karunakaran Wed, 10 June 2020 3:08:37 PM

ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்புக்குரிய ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசே விமான விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது நினைவாக ஆண்டுதோறும் அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை என்ற 6 பிரிவுகளில் ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரமோன் மக்சேசே என்றழைக்கப்படுகிறது.

1958-ம் ஆண்டு முதல் மணிலாவை தலைமையிடமாக கொண்டுள்ள ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. இது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது. இந்த விருதை இந்தியாவில் இருந்து வினோபாபாவே, அன்னை தெரசா, ஜெயபிரகாஷ் நாராயண், சத்யஜித்ரே, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், இசைக்கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவிசங்கர், டாக்டர் வி. சாந்தா போன்ற பலர் பெற்றுள்ளனர்.

ramon magsaysay,nobel prize,phillippines,asia,coronavirus ,பிலிப்பைன்ஸ்,நோபல் பரிசு ,ரமோன் மக்சேசே,ஆசியா

இந்த ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், ரமோன் மக்சேசே விருது யாருக்கும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்காமல் விடுபடுவது இது மூன்றாவது முறை. 1970-ம் ஆண்டு நிதி நெருக்கடியின் காரணமாகவும், 1990-ம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய நில நடுக்கம் காரணமாகவும் இந்த விருது ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

6 பிரிவுகளில் ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த இந்த ரமோன் மக்சேசே விருது 2009-ம் ஆண்டு முதல் ஒரே பிரிவில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விருதை 330 பேர் பெற்றுள்ளனர்.

Tags :
|