Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது

By: vaithegi Tue, 06 June 2023 10:19:29 AM

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது


சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் , சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்க்க கடந்த 5-ம் தேதி முதல் விண்ணப்பதிவானது தொடங்கி நடைபெற்று வந்தது.

இதையடுத்து பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 4ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் இதுவரை மட்டும் 1 லட்சத்து 87 ஆயிரத்து 693 பேர் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மேலும் ஒரே மாதிரியான கட் ஆப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது தரவரிசை பட்டியல் மூலம் தெரியவரும்.

random number,engineering course ,ரேண்டம் எண்,பொறியியல் படிப்பு


அதிலும் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இந்தாண்டு 2,29,165 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர் கடந்தாண்டு விட 16,810 பேர் இந்த ஆண்டு கூடுதலாக விண்ணப்பித்ததாக தெரிகிறது.

இதற்கு இடையே சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேற்று தொடங்கி வருகிற ஜூன் 20ம் தேதி வரை நடைபெறும் நிலையில் வருகிற ஜூன் 26 -ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதில் தவறுகள் ஏதேனும் இருப்பின் புகார்கள் வருகிற 26 முதல் 30 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரையும் , பொது பிரிவு கலந்தாய்வு வருகிற ஜூலை 7ம் தேதி முதல் 24 ம் தேதி வரையும் , துணை கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

Tags :