Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் .. ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் .. ரணில் விக்ரமசிங்கே

By: vaithegi Thu, 21 July 2022 11:28:35 AM

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் .. ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா்.

இதனையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றாா். இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகலுக்குப் பிறகு, இலங்கையின் இடைக்கால அதிபராகவும் பதவியேற்றார்.

ranil wickramasinghe,the new president ,ரணில் விக்ரமசிங்கே,புதிய அதிபர்

இந்நிலையில், இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நேற்று நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 223 வாக்குகளில் 219 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் அதிபர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுரா திசநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணப்பட்டதில், டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளும், அனுரா திசநாயக்க 3 வாக்குகளும் பெற்றனர். அதிகபட்சமாக 134 வாக்குகள் பெற்ற ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் இந்த நிலையில், இலங்கை நாட்டின் 8-வது அதிபராக நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்ரமசிங்கே. நாடாளுமன்ற தேர்தலில் 134 எம்பிக்களின் ஆதரவுடன் பெற்றதையடுத்து அதிபராக பதவியேற்றார் ரணில். இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்னிலையில் பதவியேற்றார் 73 வயதான ரணில். பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பிரதமராகவும் இடைக்கால அதிபராகவும் இருந்த ரணில் தற்போது அதிபராகவும் பதவியேற்றுள்ளார்.

Tags :