Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரிய வகை லெமூர் இன இரட்டையர்கள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன

அரிய வகை லெமூர் இன இரட்டையர்கள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன

By: Nagaraj Sat, 18 July 2020 11:19:47 AM

அரிய வகை லெமூர் இன இரட்டையர்கள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன

சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு பல வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. இதனால் பொருளாதார சரிவை நாடுகள் சந்தித்தன. தற்போது இதை சீரமைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிங்கப்பூரில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள மிருகக்காட்சி சாலையில், அரிய வகை லெமூர் இன இரட்டையர்கள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன.

double lemur,breeding,zoo road,opening ,
இரட்டை லெமூர், இனப்பெருக்கம், மிருகக்காட்சி சாலை, திறப்பு

11 வயது தந்தை போஸ்கோவுக்கும் ஜப்பானின் யோகோகாமா சரணாலயத்தில் இருந்து 2016 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த எட்டு வயது தாய் மின்னிக்கும் இந்த இரட்டையர்கள் கடந்த பிப்ரவரி மாதம் பிறந்தன.

இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அடையாள நோக்கங்களுக்காக மைக்ரோசிப்கள் அவற்றின் தோலில் செருகப்பட்டு காட்சிக்கு திறந்துவிடப்பட்டன.

லெமூர் இனங்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்வதால் அரியவகை விலங்குகள் பட்டியலில் பாதுகாக்கப்படுவதாக வனவிலங்கு காப்பகம் தெரிவித்துள்ளது. இதை பார்க்க ஆவலாக மக்கள் வந்து செல்கின்றனர்.

Tags :