Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரகண்ட் மாநிலத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் இனி ஆண்டுதோறும் இலவசமாக 3 கேஸ் சிலிண்டர்

உத்தரகண்ட் மாநிலத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் இனி ஆண்டுதோறும் இலவசமாக 3 கேஸ் சிலிண்டர்

By: vaithegi Tue, 12 July 2022 1:23:16 PM

உத்தரகண்ட் மாநிலத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் இனி ஆண்டுதோறும் இலவசமாக 3 கேஸ் சிலிண்டர்

உத்தரகண்ட் : நாடு முழுவதும் உள்ள தகுதியான ஏழை மக்களுக்கு மத்திய அரசாங்கம் இலவசமாக LPG கேஸ் சிலிண்டர்களை வழங்கி கொண்டு வருகிறது. அதன்படி தற்போது நாட்டில் பணவீக்கம் உயர்ந்துள்ளதால் இந்த இலவச கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதனால் இப்போது ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆண்டுதோறும் 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. அரசின் இந்த முடிவானது, பொது மக்கள் மத்தியில் இருந்து பெரும் வரவேற்புகளை பெற்று வருகிறது.

மத்திய அரசின் அந்தியோதயா அட்டை பயனாளி ஒவ்வொருவருக்கும் இந்த இலவச சிலிண்டர்கள் கிடைக்க இருக்கிறது. இது தொடர்பாக உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாநிலம் முழுவதும் உள்ள தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுதோறும் 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.

gas,ration card holders ,கேஸ் ,ரேஷன் கார்டுதாரர்கள்

மேலும் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே இந்த இலவச கேஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மாநில அரசு அறிவித்துள்ள இந்த சலுகையை பெற்றுக்கொள்ள ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் ஜூலை மாதத்திற்குள் ரேஷன் பயனாளிகள், அந்தியோதயா அட்டையை இந்த திட்டத்தில் இணைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்த பிற்பாடு ரேஷன் அட்டைகள் அந்தியோதயா நுகர்வோர் பட்டியலில் இடம் பிடிக்கும். இந்த பட்டியல் உள்ளூர் கேஸ் ஏஜென்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு பயனர்களுக்கு இலவசமாக சிலிண்டர்கள் வழங்கப்படும் என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|