Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொருட்கள் வழங்க மறுத்தால் கடும் நடவடிக்கை… ரேஷன் கடைகளுக்கு உத்தரவு

பொருட்கள் வழங்க மறுத்தால் கடும் நடவடிக்கை… ரேஷன் கடைகளுக்கு உத்தரவு

By: vaithegi Mon, 17 Apr 2023 12:49:47 PM

பொருட்கள் வழங்க மறுத்தால் கடும் நடவடிக்கை… ரேஷன் கடைகளுக்கு உத்தரவு

இந்தியா: ரேஷன் கடைகளுக்கு வரும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு ... ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டப்படி,சில ரேஷன் கடைகளில் புலம்பெயர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்க மறுப்பதாக புகார்கள் பல வருகின்றன.

இதனையடுத்து, பொருட்களை பெற ரேஷன் கடைகளுக்கு வரும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

ration shop,goods , ரேஷன் கடை,பொருட்கள்

மேலும் அவ்வாறு பொருட்களை வழங்க மறுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்போது, வேறு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையை வசூலிக்க வேண்டும்.

இதையடுத்து ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்களைபெற புலம் பெயர்ந்து வந்த ரேஷன்கார்டுதாரர்களுக்கு, வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், ஏதாவது ஒரு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார்கள் வந்தால்,அது தொடர்பான சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர், ஆய்வு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் உத்தரவிட்டு உள்ளார்.

Tags :