Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை நாட்கள்

ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை நாட்கள்

By: vaithegi Sun, 26 Nov 2023 12:30:59 PM

ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை நாட்கள்

இந்தியா:வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை .... 2023 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மாதத்திற்கான தங்கி விடுமுறையை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு கொண்டு வருகிறது அந்த வகையில் வரவிருக்கும் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் தற்போது வெளியாகிவுள்ளது.

இதனை அடுத்து சில தவிர்க்க முடியாத சூழலில் நாம் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டியது கட்டாயம் ஆகும். அதனால் இந்த விடுமுறை நாட்களை அறிந்து அதற்கேற்றவாறு பண பரிவர்த்தனை நிகழ்வுகளை மேற்கொள்ளலாம்.


bank holiday,rbi ,வங்கிகள் விடுமுறை,ரிசர்வ் வங்கி

விடுமுறை பட்டியல்:

01.12.2023 – மாநில தொடக்க நாள் – அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை
03.12.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
04.12.2023 – புனித பிரான்சிஸ் சவேரியார் பெருவிழா. பனாஜியில் வங்கி விடுமுறை
09.12.2023 – 2 – வது சனிக்கிழமை விடுமுறை
10.12.2023 – ஞாயிற்றுக்கிழமை
12.12.2023 – பா-டோகன் நெஞ்சிங் சகாமா ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை
13.12.2023 – நன்சூங். காங்டாக்கில் வங்கி விடுமுறை.

இதனை அடுத்து 17.12.2023 – ஞாயிறு விடுமுறை
18.12.2023 – சோசோ தோமின் மரணம் ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை
19.12.2023 – கோவா விடுதலை நாள்
23.12.2023 – 4 – வது சனிக்கிழமை
24.12.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
25.12.2023 – கிறிஸ்துமஸ் விடுமுறை
26.12.2023 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஐஸ்வால், கோஹிமா, ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை

Tags :