Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமா ? ஆர்பிஐ ஆளுநர் விளக்கம்

கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமா ? ஆர்பிஐ ஆளுநர் விளக்கம்

By: vaithegi Fri, 06 Oct 2023 11:15:47 AM

கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமா ? ஆர்பிஐ ஆளுநர் விளக்கம்


இந்தியா: கடன்களுக்கான (ரெப்போ வட்டி) விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்து உள்ளார். எனவே அதன்படி, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் என தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாறுதல் இல்லை.

இதையடுத்து நடப்பு நிதியாண்டு தொடக்கத்திலிருந்தே ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. நடப்பு நிதியாண்டில் 4-ஆவது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆக நீடிக்கிறது. பண்டிகை காலங்கள் தொடங்கி உள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தொடரும்.

rbi,interest rate ,ஆர்பிஐ , வட்டி விகிதம்


நாட்டில் பணவீக்கத்தை 4% க்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.3 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவீதமாக குறைந்து உள்ளது. CPI பணவீக்கம் 2023-24 க்கு 5.4% ஆகவும், 2வது காலாண்டில் 6.4% ஆகவும், Q3 இல் 5.6% ஆகவும் மற்றும் Q4 இல் 5.2% ஆகவுமிருக்கும். எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, நடப்பு 2023-24 நிதியாண்டின் உண்மையான GDP வளர்ச்சி 6.5% என்று கணிக்கப்பட்டுவுள்ளது.

2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக இருக்கும் என்றார். எனவே, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததால் வங்கிகள் வழங்கும் வீடு, வாகனம், தனிநபர் கடன்களில் மாற்றமிருக்காது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்து உள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டின் 2023-24 முதல் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்தாண்டை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1% ஆக குறைந்துள்ளது என குறிப்பிட்டார்.

Tags :
|