Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரூ.1000 நோட்டுக்களை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

ரூ.1000 நோட்டுக்களை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

By: Nagaraj Fri, 09 June 2023 06:03:25 AM

ரூ.1000 நோட்டுக்களை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்... ரூ.500 நோட்டை வாபஸ் பெற்று புதிய ரூ.1000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நிதிக் கொள்கைக் குழுவுக்குத் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

goverrnor,plan,rupees, ,கவர்னர், திட்டம், ரிசர்வ் வங்கி, ரூ.500, வங்கி கிளைகள்

500 நோட்டை வாபஸ் பெறும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறவோ, ரூ.1,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தவோ ரிசர்வ் வங்கிக்கு விருப்பம் இல்லை. இது தொடர்பாக பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை ரூ.1.80 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளைகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் செப்டம்பர் கடைசி 10-15 நாட்களில் அவசரப்பட்டு மாற்ற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|