Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி

By: Monisha Sat, 31 Oct 2020 08:52:52 AM

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது.

neet exam,score,students,online training ,நீட் தேர்வு,மதிப்பெண்,மாணவர்கள்,ஆன்லைன் பயிற்சி

மக்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் 2-வது முறையாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும். இதுவரை பிளஸ்-2 முடித்த 9 ஆயிரத்து 438 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|