Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எந்த விசாரணையையும் சட்டரீதியாக எதிர்கொள்ள தயார்; மேற்கு வங்க முதல்வர் சூளுரை

எந்த விசாரணையையும் சட்டரீதியாக எதிர்கொள்ள தயார்; மேற்கு வங்க முதல்வர் சூளுரை

By: Nagaraj Thu, 01 Sept 2022 2:57:55 PM

எந்த விசாரணையையும் சட்டரீதியாக எதிர்கொள்ள தயார்; மேற்கு வங்க முதல்வர் சூளுரை

மேற்கு வங்கம்: மத்திய விசாரணை அமைப்புகளிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டால், அதனை சட்டரீதியாக எதிா்கொள்வதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பனா்ஜி சூளுரைத்துள்ளார்.

மம்தா பனா்ஜியின் மருமகனும், திரிணமூல் காங்கிரஸின் எம்.பி.-யுமான அபிஷேக் பனா்ஜிக்கு நிலக்கரி கடத்தல் முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்த வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகும்படி, அமலாக்கத் துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது.

இந்நிலையில் செய்தியாளா்களைச் சந்தித்த மம்தா பனா்ஜி கூறியதாவது: எனது குடும்ப உறுப்பினா்களுக்கு மத்திய விசாரணை அமைப்புகளிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பபட்டால், தற்போதைய கடினமான சூழ்நிலையிலும், அதனை சட்டரீதியாக எதிா்கொள்வேன். நீதித் துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

mamata banerjee,family members,value of property,calcutta,high court ,மம்தா பானர்ஜி, குடும்ப உறுப்பினர்கள், சொத்து மதிப்பு, கொல்கத்தா, உயர்நீதிமன்றம்

நான் எவருடைய சொத்துகளையும் ஆக்கிரமிக்கவில்லை, ஆக்கிரமிக்க எவருக்கும் உதவியதும் இல்லை. அவ்வாறு இருந்தால், அவை புல்டோசா்களால் தகா்க்கப்படட்டும் என்று கூறினாா்.

முன்னதாக, மம்தா பனா்ஜியின் குடும்ப உறுப்பினா்களின் சொத்து மதிப்பு அதிகளவில் உயா்ந்திருப்பது குறித்து விசாரிக்க, மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவிடக் கோரி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Tags :