Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயார்... பாகிஸ்தான் பிரதமர் தகவல்

காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயார்... பாகிஸ்தான் பிரதமர் தகவல்

By: Nagaraj Fri, 19 Aug 2022 10:10:18 PM

காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயார்... பாகிஸ்தான் பிரதமர் தகவல்

இஸ்லாமாபாத்: தீர்வு காண தயார்... இந்தியாவுடன் நல்லுறவு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாக நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தி: பரஸ்பர நம்பிக்கை, நீதி, சமத்துவம் ஆகிய கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவு ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்புகிறது. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம், மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் அடிப்படையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமைதியான தீர்வு காண விரும்புகிறோம்.

pakistan,prime minister,india,solution,to cause,relationship,cracks ,பாகிஸ்தான், பிரதமர், இந்தியா, தீர்வு, ஏற்படுத்த வேண்டும், உறவு, விரிசல்

இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும். தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ இது முக்கியம். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அது மேலும் விரிசல் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என பல முறை மத்திய அரசு உறுதியுடன் கூறியுள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த, அமைதியான, பயங்கரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட வேண்டும். அதனை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும் என பல முறை இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|