Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதற்கான காரணங்கள்

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதற்கான காரணங்கள்

By: Karunakaran Mon, 31 Aug 2020 09:35:07 AM

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதற்கான காரணங்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து 70 ஆயிரத்துக்கு அதிகமான புதிய நோயாளிகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 1 வாரத்தில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த தொற்றை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. பரிசோதனைகளை தீவிரப்படுத்துதல், நோயாளிகளை கண்டறிதல் மற்றும் தீவிர சிகிச்சை அளித்தல் என அரசு அதிவேகமாக நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்தியாவில் கொரோனாவின் வேகம் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

reason,rapid increase,corona infection,india ,கொரோனா காரணம், விரைவான அதிகரிப்பு, கொரோனா தொற்று, இந்தியா

இந்த ஆய்வில், கொரோனா பரிசோதனையின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். அத்துடன் ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கொரோனாவுக்கு எதிராக மக்களிடம் நிலவும் மெத்தனப்போக்கு போன்றவையும் கொரோனா அதிகம் பரவ காரணமாக அமைந்ததாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் தொற்று நோய்கள் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பண்டா கூறியுள்ளார்.

மேலும், முக கவசம் அணிதல், கைகளை கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அறிவுரைகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். இதற்கு காரணம், நாட்டில் தொற்றில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைவான சாவு விகிதம் போன்ற அறிவிப்புகளால் ஏற்பட்டுள்ள மெத்தனமே ஆகும். தற்போதைய சூழலில் பரிசோதனைகளை அதிகரிப்பதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. ஆனால் தனி மனிதர்கள் மட்டத்தில் எச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|