Advertisement

அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதில் பின்னடைவு

By: Nagaraj Sun, 23 Aug 2020 11:17:03 AM

அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதில் பின்னடைவு

ஜெர்மனியில் அமெரிக்கப் படைக் குறைப்பு... ஜெர்மனியில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதில் பல பின்னடைவுகள் உள்ளதாக ராணுவ நோக்கர்கள் கருதுகின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவின் பல நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்தைத் தடுக்க அமெரிக்கா 4 லட்சம் வீரர்களை நிறுத்தி வைத்தது. இவர்களில் அதிகம் பேர் மேற்கு ஜெர்மனியில் இருந்தனர். சோவியத் ஒன்றியத்தின் சிதறல், கிழக்கு மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பு ஆகியவற்றுக்குப் பின் ஐரோப்பாவில் படிப்படியாக அமெரிக்கப் படையின் இருப்பு குறைந்து கொண்டே வந்தது.

nato countries,russia,germany,us forces ,நேட்டோ நாடுகள், ரஷ்யா, ஜெர்மன், அமெரிக்கா படைகள்

இந்நிலையில் ஜெர்மனியில் இருந்து 12 ஆயிரம் ராணுவ வீரர்களைத் திரும்பப் பெற டிரம்ப் நிர்வாகம் கடந்த மாதம் முடிவு செய்தது. இவர்களில் ஐயாயிரத்து 400 பேரைப் போலந்து உள்ளிட்ட பிற நாடுகளில் தங்க வைத்துவிட்டு மீதிப்பேரை அமெரிக்காவுக்கு அழைத்துக் கொள்கிறது.

இவ்வாறு படைவீரர்களை வேறிடத்துக்கு மாற்றுவது ரஷ்யாவுக்கே நன்மையாக அமையும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேட்டோ நாடுகளும் தெரிவித்துள்ளனர். 2012ஆம் ஆண்டில் ஜெர்மனியில் இருந்து அமெரிக்கா படைகளைக் குறைத்துக் கொண்டதையும், அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதையும் அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

Tags :
|