Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக முரளிதரை நியமிக்க பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக முரளிதரை நியமிக்க பரிந்துரை

By: Nagaraj Thu, 29 Sept 2022 5:56:58 PM

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக முரளிதரை நியமிக்க பரிந்துரை

புதுடில்லி: பரிந்துரை செய்தது... ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான கொலீஜியத்தில் மூத்த நீதிபதிகளான சந்திரசூட் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கொலீஜியம் ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் முரளிதரை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

collegium,nomination,high court,muralidhar,appointment ,கொலீஜியம், பரிந்துரை, உயர்நீதிமன்றம், முரளிதர், நியமனம்

கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முரளிதர், பின்னர் 2020 மார்ச் 6ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து 2021 ஜன.,4ல் ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு நடந்த கொலீஜியம் கூட்டத்தில் மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் திபங்கர் தத்தாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. மேலும், கர்நாடகா, மும்பை, பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றங்களுக்கு 20 நீதிபதிகளை நியமிப்பதற்கு கொலிஜியம் பரிந்துரை வழங்கியது.

Tags :