Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் கொரியா கருவிகள் வாயிலாக கொரோனா பரிசோதனை செய்ய பரிந்துரை

தென் கொரியா கருவிகள் வாயிலாக கொரோனா பரிசோதனை செய்ய பரிந்துரை

By: Nagaraj Wed, 17 June 2020 07:42:36 AM

தென் கொரியா கருவிகள் வாயிலாக கொரோனா பரிசோதனை செய்ய பரிந்துரை

ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை... நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்ய ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் இவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ( ஐ.சி.எம்.ஆர் ) பரிந்துரைக்க வேண்டும்.

இந்நிலையில் தொற்று நோய் குறித்து வெளியிட்ட அறிக்கையில்கூறியதாவது:

recommendation,rt-pcr,experiment,corona ,
பரிந்துரை, ஆர்டி-பிசிஆர், பரிசோதனை, கொரோனா

தென் கொரியாவை சேர்ந்த எஸ்டி பயோசென்சார் என்னும் நிறுவனம், கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் (Standard Que covid 19 Dictation kit). இந்த கருவியில், சோதனை மாதிரியை வைத்த 15 நிமிடங்களில் முடிவு தெரியும்.

இதற்கு ஆய்வுக்கூட பரிசோதனை எதுவும் தேவையில்லை. எளிதாக வெற்று கண்களால் பார்க்க முடியும். இதற்கு வெறும் 30 நிமிடங்களே போதுமானது. பரிசோதனைக்கு பின் இந்த அட்டையை அழித்து விடலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த சோதனையில் தொற்று இல்லை என கண்டறியப்பட்டால், அதை மேலும் உறுதி செய்ய ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். தொற்று உறுதியானால் ஆர்டி-பிசிஆர் சோதனை தேவையில்லை. ஏனென்றால், ரேபிட் பரிசோதனையில் தொற்று உறுதியானால், பிசிஆர் பரிசோதனையிலும் அதே முடிவுதான் வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|