Advertisement

பிளஸ்1 பொது தேர்வை ரத்து செய்யலாம் என பரிந்துரை

By: Nagaraj Sat, 13 Aug 2022 10:48:07 AM

பிளஸ்1 பொது தேர்வை ரத்து செய்யலாம் என பரிந்துரை

சென்னை: ரத்து செய்ய பரிந்துரை... 'பிளஸ் 1 பொது தேர்வு எதிர்பார்த்த அளவுக்கு பலன் அளிக்காததால், அதை ரத்து செய்யலாம்' என, பள்ளிக் கல்வித் துறை பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை, பெரும்பாலான மாநிலங்கள் நடைமுறைப்படுத்த துவங்கியுள்ளன. தமிழகத்தில் அரசியல் ரீதியாக புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்புகள் உள்ளதால், மாநில அளவில் கல்வி கொள்கை அமைக்க, தமிழக அரசு குழு அமைத்துள்ளது.ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான இந்த குழுவின் சார்பில், பல்வேறு துறை அதிகாரிகளிடம் நேற்று கருத்துகள் பெறப்பட்டன.

பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார், இயக்குனர்கள் சேதுராம வர்மா, லதா, அறிவொளி உள்ளிட்டோரிடமும் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, பள்ளிக் கல்வி துறை கீழ் செயல்படும் பள்ளிகளையும், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், வனத் துறை, அறநிலையத் துறை பள்ளிகளையும், ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது குறித்து, கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்து செய்யலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. பிளஸ் 1 பொது தேர்வு எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை. அதை ரத்து செய்வதால், மாணவர்களுக்கு கல்வி ரீதியாகவும், உயர் கல்வி செல்வதற்கும் எந்த பாதிப்பும் இருக்காது. சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட மற்ற பாடத்திட்டங்களில் கூட, பிளஸ் 1க்கு பொது தேர்வு இல்லை.

additional load,plus 1 exam,teachers,students,referral ,
கூடுதல் சுமை, பிளஸ் 1 தேர்வு, ஆசிரியர்கள், மாணவர்கள், பரிந்துரை

தமிழகம் மட்டுமே, பிளஸ் 1 பொது தேர்வை நடத்துகிறது.மேலும், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களால், 10ம் வகுப்பு பொது தேர்வை முடித்ததும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, தொடர்ந்து இரண்டு பொது தேர்வுகளுக்கு தயாராக முடியாத நிலை உள்ளது.

உயர் கல்வி சேர்க்கைக்கும், பிளஸ் 1 மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே, முக்கியத்துவம் இல்லாத பிளஸ் 1 பொது தேர்வை நடத்துவதில் கூடுதல் வேலைப்பளு, நிதி இழப்பு ஏற்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள், பிளஸ் 1 தேர்வை நடத்துவது மற்றும் விடை திருத்தம் போன்ற பணிகளில் ஈடுபடுவதால், அவர்களால் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில், அதிக கவனம் செலுத்த முடிவதில்லை.

எனவே, பிளஸ் 1 தேர்வு முக்கியத்துவம் அற்ற நிலையில், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கூடுதல் சுமையாக உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Tags :