Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்க இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பரிந்துரை

நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்க இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பரிந்துரை

By: Monisha Tue, 28 July 2020 11:44:26 AM

நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்க இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பரிந்துரை

இந்தியா முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ள அன்லாக் 3.0 காலகட்டத்தில் திரையரங்குகளை திறக்க இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளையும் விதிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.

முதலாவதாக திரையரங்கிற்குள் செல்லும் அனைத்து நபர்களுக்கும் கட்டாயமாக காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோல் தியேட்டர்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், கடுமையான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக மூலம் டிக்கெட்டுக்கள் வழங்க வேண்டும். என்ட்ரி மற்றும் எக்சிட் பகுதிகளில் மக்கள் கூட்டம் சேராமல் இருக்க, போதுமான நேர இடைவெளியுடன் திரைப்படங்களை திரையிட வேண்டும்.

theaters,unlock 3.0,condition,movies,sanitizers ,திரையரங்குகள்,அன்லாக் 3.0,நிபந்தனை,திரைப்படங்கள்,சானிடைசர்கள்

பார்வையாளர்கள் கட்டாயம் மாஸ்குகள் அணிய வேண்டும். பார்வையாளர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு இருக்கை இடைவெளி இருக்க வேண்டும். திரையரங்குகளில் 50 சதவிகிதம் நபர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னரும் தியேட்டர் இருக்கைகள் சுத்திகரிக்கப்பட வேண்டும். அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொது இடத்தில் சானிடைசர்கள் வைக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுடன் அன்லாக் 3.0 காலகட்டத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கலாம் என இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய மாநில அரசு என்ன முடிவெடுக்கிறது என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Tags :
|