Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போராட்டங்களை கண்காணிக்க உளவு விமானங்கள்; அதிபர் டிரம்ப் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

போராட்டங்களை கண்காணிக்க உளவு விமானங்கள்; அதிபர் டிரம்ப் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

By: Nagaraj Fri, 12 June 2020 2:17:22 PM

போராட்டங்களை கண்காணிக்க உளவு விமானங்கள்; அதிபர் டிரம்ப் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

உளவு விமானங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு... அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு நீதிக்கோரும் போராட்டங்களை கண்காணிக்க மத்திய முகவர்கள், ஆளில்லா விமானங்கள், உளவு விமானங்கள் மற்றும் இரகசிய நுட்பங்களைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அமெரிக்கர்கள் மீது முறையற்ற முறையில் உளவு பார்க்கிறதா என அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகவாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் அமெரிக்கர்களின் எந்தவொரு மற்றும் அனைத்து கண்காணிப்பையும் நீங்கள் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்’ என்று 30 மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டோபர் வே மற்றும் அமெரிக்காவின் உயர் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

struggle,unmanned flight,indictment,espionage ,போராட்டம், ஆளில்லாத விமானம், குற்றச்சாட்டு, உளவு பார்த்தல்


அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (சிபிபி) மே 29ஆம் திகதி மினியாபோலிஸ் நகரத்தின் மீது ஆளில்லா விமானமொன்றினை பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல, காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பொது அறிக்கையின்படி, எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி வொஷிங்டன் டி.சி.யில் கைத்தொலைப்பேசி இருப்பிடத் தரவை சேகரிக்க எஃப்.பி.ஐ ஒரு சிறிய விமானத்தைப் பயன்படுத்தியுள்ளது.

எஃப்.பி.ஐ மற்றும் அமெரிக்க தேசிய படை ஒரே நாளில் வொஷிங்டன் டி.சி மற்றும் லாஸ் வேகாஸ் வழியாக அகச்சிவப்புக் கதிர் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் கேமராக்களுடன் ஹைடெக் ஆர்.சி-26 உளவு விமானத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறித்த போரட்டங்கள் பெருமளவில் அமைதியான போராட்டங்களாகவே இருந்துள்ள போதிலும், சில சமயங்களில் சில போராட்டங்கள் வன்முறையாகவும் மாறியுள்ளன.

Tags :