Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிலி நாட்டில் கணக்கில் சேர்க்கப்படாத 3 ஆயிரத்து 69 கொரோனா இறப்புகள் மறுகட்டமைப்பு

சிலி நாட்டில் கணக்கில் சேர்க்கப்படாத 3 ஆயிரத்து 69 கொரோனா இறப்புகள் மறுகட்டமைப்பு

By: Karunakaran Sun, 21 June 2020 11:06:21 AM

சிலி நாட்டில் கணக்கில் சேர்க்கப்படாத 3 ஆயிரத்து 69 கொரோனா இறப்புகள் மறுகட்டமைப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 4 லட்சத்து 65 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சிலி நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா காரணமாக அங்கு 2 லட்சத்து 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக அங்கு 4 ஆயிரத்து 75 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஏற்பட்ட ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் அரசின் கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால் தற்போது கொரோனா உயிரிழப்புகளை கணக்கிடும் நடைமுறையில் சிலி அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது.

chile,corona death,reconstruction,government death account ,சிலி,கொரோனா இறப்பு,மறுகட்டமைப்பு, கொரோனா வைரஸ்,அரசின் கணக்கு

கொரோனா வைரசால் ஏற்கனவே உயிரிழந்து அரசின் இறப்பு தகவல் பட்டியலில் இடம்பெறாதவர்களின் எண்ணிக்கை தொடர்பாக விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் 3 ஆயிரத்து 69 இறப்புகள் அரசின் இறப்பு தகவல் பட்டியலில் இடம் பெறாதது தெரிய வந்தது. இதனால், கொரோனா இறப்பு தரவுகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு இந்த உயிரிழப்புகள் அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டது.

தற்போது சிலி நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் மற்றும் ரஷ்யா நாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|