Advertisement

கட்டுமானப்பணிகளின் போது வெடிப்பொருட்கள் மீட்பு

By: Nagaraj Wed, 16 Sept 2020 4:20:49 PM

கட்டுமானப்பணிகளின் போது வெடிப்பொருட்கள் மீட்பு

வெடிப் பொருட்கள் மீட்பு... முல்லைத்தீவு –முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்த தனியார் காணியொன்றிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வெடிபொருட்கள் இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் மறைத்துவைக்கப்பட்ட வெடிபொருட்களாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

explosives rescue,navy,mullaitivu,detonator ,வெடிப்பொருட்கள் மீட்பு, கடற்படை, முல்லைத்தீவு, டெட்டனேட்டர்

கிழக்கு பிராந்திய கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின்போது, 3 பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்த TNT ரக வெடிபொருள் 45 கிலோ கிராம், C 4 ரக வெடிபொருள் 5 கிலோ கிராம், 81 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 7, அடையாளம் காணப்படாத 15 fuseகள், 118 expelling charger, கிளைமோர் குண்டு ஒன்று, அடையாளம் காணப்படாத 8 கிலோ அளவுள்ள குண்டு மற்றும் மின்சார டெட்டனேட்டர் ஒன்று ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த வெடிபொருட்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக கடற்படையினரால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Tags :
|