Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துபாயில் தீவிர பயிற்சி பெற்ற 5 பெண்களுக்கு வெடிகுண்டு நிபுணர்களாக பணிநியமனம்

துபாயில் தீவிர பயிற்சி பெற்ற 5 பெண்களுக்கு வெடிகுண்டு நிபுணர்களாக பணிநியமனம்

By: Karunakaran Mon, 28 Sept 2020 3:32:24 PM

துபாயில் தீவிர பயிற்சி பெற்ற 5 பெண்களுக்கு வெடிகுண்டு நிபுணர்களாக பணிநியமனம்

துபாயில் தொடர்ந்து பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீஸ் துறையில் பணியாற்றிய 5 பெண் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு நிபணர்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த பயிற்சி இந்த மாதத்தில் நிறைவடைந்தது. தற்போது சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்துள்ள அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்ற 5 பேருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக பணி நியமனம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரீம் அப்துல் ரஹ்மான் என்ற பெண் அதிகாரி முதல் பெண் வெடிகுண்டு நிபுணராக தேர்ச்சி பெற்றார். அதன்பின் நூப் முகம்மது இப்ராகிம், கொலவுத் அப்துல்லா அல் மர்ரி, ஆயிஷா முகம்மது அப்துல்லா, அபீர் முகம்மது இப்ராகிம் ஆகிய பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

recruitment,5 women,bomb experts,dubai ,ஆட்சேர்ப்பு, 5 பெண்கள், வெடிகுண்டு நிபுணர்கள், துபாய்

வெடிகுண்டு பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக பணி நியமிக்கப்பட்ட அனைவருக்கும் திறன் மேம்பாடு, உடற்தகுதியை பராமரிப்பது, வெடிகுண்டுகள் குறித்த பாடவகுப்புகள், செயல்முறை பயிற்சிகள் ஆகியவை சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சி பெற்ற இந்த 5 பெண் களுக்கு வெடிகுண்டு நிபுணர்களாக பணிநியமனம் வழங்கப்பட்டது.

இவர்களது பணியானது உரிமம் பெறாத வெடிக்கும் பொருட்களை செயலிழக்க வைப்பது, மண்ணிற்கு சேதம் விளைவிக்காமல் பாதுகாப்பாக வெடிபொருட்களை அகற்றுவது, சட்டவிரோதமான வெடிகுண்டுகள் மற்றும் அபாயகரமான பட்டாசுகளை அழிப்பது போன்றவைகளை மேற்கொள்ளவதாக இருக்கும்.

Tags :