Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருவதால் ரெட் அலர்ட்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருவதால் ரெட் அலர்ட்

By: vaithegi Fri, 15 July 2022 3:15:03 PM

நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருவதால் ரெட் அலர்ட்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட 4 தாலுக்காக்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாயார், பாண்டியாறு, பொன்னம்புலா , காளம்புலா ஆகிய முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் மங்குனியாறு மற்றும் குடிவயல் ஆறுகளில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் அருகில் இருக்கும் குடியிருப்புகளில் சேதாரம் ஏற்படுகிறது. வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய காவல்துறை, தீயணைப்புதுறை, வருவாய்துறையினர் அடங்கிய 42 குழுக்கள் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இத தொடர்ந்து வெள்ள சேதாரங்கள் அதிகமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தேசிய பேரீடர் மீட்பு படை உதவியை நாடியுள்ளது. இதனையடுத்து 74 பேர் கொண்ட குழு மீட்பு பணிகளுக்கு வர இருப்பதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் அதிகமான கனமழை காரணமாக ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்து இருக்கிறது.

red alert,heavy rain,nilgiris ,ரெட் அலர்ட் ,கனமழை ,நீலகிரி

மேலும் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் கரையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ரெட் அலர்ட் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags :