Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை

மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை

By: vaithegi Wed, 13 July 2022 1:04:21 PM

மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை


மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பருவமழை துவங்கியதில் இருந்து வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் கனமழை காரணமாக மும்பையின் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி இருக்கிறது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே வழித்தடங்களில் இயங்கும் உள்ளூர் ரயில்கள் வழக்கம் போல் இயங்குவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சில

இருந்தாலும், உள்ளூர் ரயில்கள் 5 முதல் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக சில பயணிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மும்பையில் ஒரு சில தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், குறிப்பாக தெற்கு மும்பையுடன் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

red alert,maharashtra ,ரெட் அலெர்ட் ,மகாராஷ்டிரா

மேலும் போரிவலி, கோரேகான், ஜோகேஸ்வரி, அந்தேரி மற்றும் பாந்த்ராவுக்கு அருகில் ஓரளவுக்கு மிக கடுமையான போக்குவரத்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மும்பையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

இதனால், மகாராஷ்டிராவின் புனே, சதாரா, சோலாப்பூர், சாங்லி மற்றும் கோலாப்பூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்திற்கு மிதமானது முதல் தீவிரமானது வரை மழை பொழியும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tags :