Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் கடத்தப்பட்ட தங்கத்தின் நிறம் சிவப்பு - ஜேபி நட்டா கடும் விமர்சனம்

கேரளாவில் கடத்தப்பட்ட தங்கத்தின் நிறம் சிவப்பு - ஜேபி நட்டா கடும் விமர்சனம்

By: Karunakaran Mon, 13 July 2020 10:52:22 AM

கேரளாவில் கடத்தப்பட்ட தங்கத்தின் நிறம் சிவப்பு - ஜேபி நட்டா கடும் விமர்சனம்

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில், பா.ஜ.க. அலுவலகம் திறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த அலுவலகத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைத்தார். அதன்பின், கேரளாவில் கடத்தப்பட்ட தங்கம் குறித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவர்கள் மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள் என்று கூறினார்.

kerala,jp natta,gold smuggle,red color ,கேரளா, ஜே.பி.நட்டா, தங்க கடத்தல், சிவப்பு நிறம்

மேலும் அவர், தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஓட்டு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருவதாகவும், கேரளாவில் தனது கொடியை நிச்சயம் பா.ஜ.க ஊன்றும் எனவும், தங்கத்தின் நிறம் மஞ்சள், ஆனால் கேரளாவில் மட்டும் தங்கத்தின் நிறம் 'சிவப்பு' என்று கூறினார்.

கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு உள்ளதாக ஜேபி நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
|