Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாடகை செலுத்தாக 130 வர்த்தக நிலையங்களுக்கு சிவப்பு அறிவித்தல்

வாடகை செலுத்தாக 130 வர்த்தக நிலையங்களுக்கு சிவப்பு அறிவித்தல்

By: Nagaraj Mon, 10 July 2023 8:32:08 PM

வாடகை செலுத்தாக 130 வர்த்தக நிலையங்களுக்கு சிவப்பு அறிவித்தல்

வவுனியா: சிவப்பு அறிவித்தல்... வவுனியா நகர சபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களுக்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் கடந்த 2022ம் ஆண்டு தொடக்கம் பல வர்த்தக நிலையங்கள் நில வாடகை செலுத்தாத நிலையில் நகரசபையினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

land rent,shops,municipal council,permits,commercial establishments,prosecution ,நில வாடகை, கடைகள், நகரசபை, அனுமதி, வர்த்தக நிலையங்கள், வழக்குப்பதிவு

இதன் முதற் கட்டமாக கடந்த 05ம் திகதி 86 கடைகளும், இன்றையதினம் 44 கடைகளுக்கும் சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் நில வாடகை செலுத்தாத ஏனைய வர்த்தக நிலையங்களிற்கும் இந்நடவடிக்கை தொடரவுள்ளது.

மேலும் நகரசபையின் அனுமதியின்றி சிவப்பு அறிவித்தலினை அகற்றியமைக்காக வர்த்தக நிலையங்களின் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Tags :
|