Advertisement

உடலுக்கு ஊட்டம் அளிக்கும் செம்பருத்திப் பூ ரசம்

By: Nagaraj Thu, 15 Sept 2022 10:08:37 AM

உடலுக்கு ஊட்டம் அளிக்கும் செம்பருத்திப் பூ ரசம்

சென்னை: ரத்த சோகை, இதயநோய் அணுகாமல் தடுக்கும் ஆற்றல் செம்பருத்திப் பூவில் ரசம் செய்து ருசியுங்கள்.

தேவையான பொருட்கள் :
செம்பருத்திப் பூ - 4
துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
தக்காளி - 1
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
எண்ணெய்/நெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு

hibiscus flower,chickpeas,tomato,pepper,cumin ,செம்பருத்திப் பூ,  துவரம்பருப்பு, தக்காளி,  மிளகு, சீரகம்

செய்முறை : செம்பருத்திப் பூவில் உள்ள காம்பு, மகரந்தம் நீக்கிவிட்டு இதழ்களை மட்டும் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். துவரம் பருப்பை வேகவைத்து எடுத்து வைத்துக் கொாள்ளவும். பின்னர், கொதித்த தண்ணீரில் தக்காளி, மிளகாய், மிளகு, சீரகத்தைப் பொடித்து சேர்க்கவும்.


அதனுடன் வேகவைத்த துவரம் பருப்பைக் கரைத்து ஊற்றவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், தாளித்து கறிவேப்பிலை பெருங்காயப் பொடி சேர்க்கவும். அது பொங்கி வரும்போது கொத்துமல்லி தூவி இறக்கவும். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவையான செம்பருத்தி ரசம் தயார்.

பயன்கள்: செம்பருத்திப் பூ இதழின் சாறு நீர்ச் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். ரத்த சோகை, இதயநோய் அணுகாமல் தடுக்கும் ஆற்றல் செம்பருத்திப் பூவிற்கு உண்டு. உடல் குளிர்ச்சிக்கு செம்பருத்தி ரசம் நல்ல பலன் தரும்.

Tags :
|
|