Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நொய்டா - கிரேட்டர் நொய்டா அதிவிரைவுச் சாலையில் வாகனங்களின் வேகவரம்பு குறைப்பு

நொய்டா - கிரேட்டர் நொய்டா அதிவிரைவுச் சாலையில் வாகனங்களின் வேகவரம்பு குறைப்பு

By: Nagaraj Wed, 21 Dec 2022 4:19:17 PM

நொய்டா - கிரேட்டர் நொய்டா அதிவிரைவுச் சாலையில் வாகனங்களின் வேகவரம்பு குறைப்பு

நெய்டா: வாகனங்களின் வேக வரம்பு குறைப்பு... கடும் பனிமூட்டம் காரணமாக, நொய்டா - கிரேட்டர் நொய்டா அதிவிரைவுச்சாலையில் வாகனங்களின் வேக வரம்பு, மணிக்கு 100 கிலோ மீட்டரில் இருந்து 75 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

சுமார் 25 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ஆறு வழி விரைவுச்சாலையில் தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், பனிமூட்டத்தால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

neida,speed control,police,warning,action ,நெய்டா, வேக கட்டுப்பாடு, போலீசார், எச்சரிக்கை, நடவடிக்கை

இதே போல, நொய்டாவில் உள்ள முக்கிய சாலைகளிலும் வாகனங்களின் வேக வரம்பு மணிக்கு 65 கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், வேக வரம்பை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நொய்டா போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வேக கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். விபத்தின்றி வாகனங்கள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|
|