Advertisement

அபுதாபியில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

By: Karunakaran Fri, 11 Sept 2020 2:19:06 PM

அபுதாபியில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருவதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் கொரோனா மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன.

அபுதாபி சுகாதாரத்துறை சார்பில் அமீரகம் முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் அபுதாபி, அல் அய்ன், துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.

reduction,corona test,fees,abu dhabi ,குறைப்பு, கொரோனா சோதனை, கட்டணம், அபுதாபி

அபுதாபி சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக சென்று கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்காக 370 திர்ஹாம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் குறைக்கப்பட்டு 250 திர்ஹாம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இந்த சிறப்பு மையங்கள் ஏற்படுத்தியுள்ள சிறப்பு பரிசோதனை மையங்களில் காரில் இருந்தே பரிசோதனை செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்த தகவலை அபுதாபி சுகாதாரத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags :
|