Advertisement

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு..

By: Monisha Fri, 08 July 2022 9:26:00 PM

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு..

தமிழ்நாடு: பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது.நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்ளூர் தயாரிப்புகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகின்றன.

கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.

corona,booster,dose,vaccine ,கொரோனா,பூஸ்டர்,கோவிஷீல்டு,
கோவாக்சின்,

தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசிக்கு கால இடைவெளி 9 மாதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

Tags :
|
|