Advertisement

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

By: Nagaraj Sun, 10 May 2020 4:57:22 PM

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

பிரதமர் மோடி நாளை ஆலோசனை... அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ( மே.11 ம் தேதி) வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

ஊரடங்கு நிலை, கொரோனா தடுப்பு பணிகள், சுகாதார நடவடிக்கைகள் ஆகியன குறித்து விவாதிக்க உள்ளார் .உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவால் இந்தியாவில் ஏறக்குறைய 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு அமலில் உள்ளது. கொஞ்சம், கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


tomorrow,the prime minister and the chief ministers of the state,noon ,நாளை, பிரதமர், மாநில முதல்வர்கள் ஆலோசனை, மதியம்

ரயில், பஸ் போக்குவரத்து குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை .இந்தியாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் இத்தொற்று கட்டுக்குள் வராமல் இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு வரும் 17 ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.

அடுத்து ஊரடங்கு ரத்து மற்றும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி முதல்வர்களுடன் விவாதிக்க உள்ளார். நாளை மதியம் 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசிக்க உள்ளார்.

Tags :