Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்தில் குடிநீர் பாட்டில் விற்பனைக்கு கட்டுப்பாடு; மக்கள் எதிர்ப்பு

இங்கிலாந்தில் குடிநீர் பாட்டில் விற்பனைக்கு கட்டுப்பாடு; மக்கள் எதிர்ப்பு

By: Nagaraj Sun, 14 Aug 2022 4:47:29 PM

இங்கிலாந்தில் குடிநீர் பாட்டில் விற்பனைக்கு கட்டுப்பாடு; மக்கள் எதிர்ப்பு

இங்கிலாந்து: குடிநீர் பாட்டில் விற்பனைக்கு கட்டுப்பாடு... இங்கிலாந்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக பல்பொருள் அங்காடிகளில் குடிநீர் பாட்டில் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


பிரிட்டனில் வரலாறு காணாத வகையில் கோடை காலம் மிகவும் உக்கிரமாக இருந்து வரும் நிலையில், பல நகரங்கள் தற்போது வறட்சியை எதிர்கொள்கின்றன. மேலும் பல நகரங்களை வறட்சி பாதித்த நகரங்களாக அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பற்றாகுறை அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் மக்கள் தங்கள் தேவைக்காக பாட்டில் தண்ணீரையே நாடுகிறார்கள்.

plan,constraints,windows,blocking,buildings ,திட்டம், கட்டுப்பாடுகள், ஜன்னல்கள், தடை செய்தல், கட்டிடங்கள்

3 முதல் 5 குடிநீர் பாட்டில்கள் மட்டும் வாங்கும்படி அந்த அங்காடிகள் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளன. நோட்டீசும் ஒட்டப்பட்டன. கடும் எதிர்ப்புக்குப் பிறகு இந்த நோட்டீஸ் அகற்றப்பட்டாலும், பல கடைகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

மேலும் அதிக வெப்பம் காரணமாக உருளைக் கிழங்கு, ஆப்பிள் போன்ற பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது.
வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்வதை தடை செய்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

Tags :
|