Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கக்கோரும் அமெரிக்காவின் தீர்மானம் நிராகரிப்பு

ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கக்கோரும் அமெரிக்காவின் தீர்மானம் நிராகரிப்பு

By: Karunakaran Sun, 16 Aug 2020 1:53:01 PM

ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கக்கோரும் அமெரிக்காவின் தீர்மானம் நிராகரிப்பு

ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததன் காரணமாக, கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா. ஆயுத தடையை விதித்தது. இதன்படி, ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் போன்ற ஆயுதங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்பட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஈரான் மீதான ஆயுத தடை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காலாவதியாகும் என ஒப்பந்தத்தில் ஐ.நா. உத்தரவாதம் அளித்தது. இந்நிலையில் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. இதனால் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடிக்கிறது.

us,resolution extending arms,embargo,iran,un ,அமெரிக்கா, ஆயுதம், தடை, ஈரான், ஐ.நா.

தற்போது, ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடை வருகிற அக்டோபரில் காலாவதியாகும் நிலையில் அந்த தடையை காலவரையின்றி நீட்டிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. இதுகுறித்து 15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. இதனை சீனா மற்றும் ரஷியா கடுமையாக எதிர்த்தது.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றபோது, ஈரான் மீதான ஆயுத தடை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்க்கமாக செயல்படத்தவறியது மன்னிக்க முடியாதது என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

Tags :
|
|