Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாளம் நிலநடுக்கத்தில் இறந்த உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்

நேபாளம் நிலநடுக்கத்தில் இறந்த உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்

By: Nagaraj Tue, 07 Nov 2023 3:58:26 PM

நேபாளம் நிலநடுக்கத்தில் இறந்த உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்

காத்மாண்டு: தவிக்கும் மக்கள்... நேபாளத்தில் வெள்ளி கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய கூட வழியில்லாமல் ஏழை மக்கள் கண்ணீர் சிந்தும் காட்சிகள் காண்போரை இதயங்களை பிழிவதாக உள்ளது.

நேபாளத்தின் ஜாஜார்கோட் மாவட்டத்தில் கடந்த வெள்ளி கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது வீடுகளின் சுவர்கள், மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. இதனால் பலரது உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. 157 பேர் மரணமடைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.

burials,dead bodies,paths,people,suffering ,அடக்கம், உடல்கள், உற்றார்கள், தவிப்பு, மக்கள்

ஜாஜார்க்கோட் மாவட்டம் முழுவதும் அழுகுரல் கேட்கும் நிலையில் இறந்த தங்கள் இன்னுயிர்களை நல்லடக்கம் செய்யக்கூட பணமோ, பிற வசதிகளோ இல்லாமல் ஏழை மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடுகளில் ஒன்றான நேபாளம் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுகின்ற இடங்களில் ஒன்றாகும்.

எனினும் கடந்த 2014 ஆண்டுக்கு பிறகு கடந்த வெள்ளி அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் அதிக உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் இது 6.4ஆக பதிவாகியுள்ளது. தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags :
|
|