Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எக்ஸ்ரே எடுக்க வீதிவீதியாக கொரோனா நோயாளியுடன் அலைந்த உறவினர்கள்

எக்ஸ்ரே எடுக்க வீதிவீதியாக கொரோனா நோயாளியுடன் அலைந்த உறவினர்கள்

By: Nagaraj Sat, 18 July 2020 10:16:41 PM

எக்ஸ்ரே எடுக்க வீதிவீதியாக கொரோனா நோயாளியுடன் அலைந்த உறவினர்கள்

எக்ஸ்ரே எடுக்க வீதி வீதியாக சென்ற கொரோனா நோயாளி... கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்த நோயாளியை எக்ஸ்ரே எடுத்து வர கூறி மருத்துவர்கள் வெளியில் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள அரசு காந்தி மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வந்தார். நோயாளியை பரிசோதித்த மருத்துவர்கள் இங்கு எக்ஸ்ரே எடுக்க வசதி இல்லை எனவே வெளியில் சென்று எக்ஸ்ரே எடுத்து கொண்டு வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்ததாக தெரியவருகிறது.

cancer,juvenile death,vellore,corpse,cemetery ,உறவினர்கள், ஆந்திரா, எக்ஸ் ரே மையம், கொரோனா நோயாளி

நோயாளியை எக்ஸ்ரே எடுப்பதற்காக வெளியில் அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தால் மருத்துவமனையில் வழங்கப்பட்ட ஸ்ட்ரெச்சரில் அவரை படுக்க வைத்த உறவினர்கள் ஸ்ட்ரெச்சரை தள்ளிக்கொண்டு கர்னூல் நகர வீதிகளில் எக்ஸ்ரே சென்டரை தேடி வீதி வீதியாக அலைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த ஆந்திர மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கர்னூல் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கும் வசதி உள்ளது, எக்ஸ்ரே இயந்திரம் வேலை செய்கிறது. எனவே அவரை வெளியில் அனுப்ப வேண்டிய காரணம் என்ன என்பது பற்றி மருத்துவமனை கண்காணிப்பாளர் விசாரணை நடத்துகிறார்.

Tags :
|
|