Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீடியோ காலில் டாக்டரின் ஆலோசனை பெற்று பெண்ணுக்கு பிரசவம் பார்த்த உறவினர்கள்

வீடியோ காலில் டாக்டரின் ஆலோசனை பெற்று பெண்ணுக்கு பிரசவம் பார்த்த உறவினர்கள்

By: Karunakaran Wed, 29 July 2020 2:52:14 PM

வீடியோ காலில் டாக்டரின் ஆலோசனை பெற்று பெண்ணுக்கு பிரசவம் பார்த்த உறவினர்கள்

கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் 5 வாரம் ஞாயிறு முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் அங்கு ஞாயிறு ஊரடங்கின் போது ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் வீடியோ காலில் டாக்டரின் ஆலோசனை பெற்று பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது.

ஹாவேரி மாவட்டம் ஹனகல் டவுன் பகுதியை சேர்ந்த வாசவி என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அறிந்த வாசவியின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அவரது கணவர் வாகனத்தை தேடி சென்றார். ஞாயிறு ஊரடங்கு காரணமாக, வாகனம் கிடைக்கவில்லை.

video footage,pregnant woman,consulting,karnataka ,வீடியோ காட்சிகள், கர்ப்பிணி பெண், ஆலோசனை, கர்நாடகா

அந்த நேரத்தில் வாசவியின் உறவுக்கார பெண் ஒருவர் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவரான பிரியங்கா மண்டகியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் தனக்கு வீடியோ கால் செய்யும்படி டாக்டர் பிரியங்கா கூறினார். அப்போது பிரியங்கா வீடியோ கால் மூலம் சில அறிவுரைகளை கூறியவாறு வாசவியின் உறவுக்கார பெண்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

இதில் வாசவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் வாசவியும், அவரது உறவுக்கார பெண்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின், நேற்று முன்தினம் காலை வாசவியும், அவரது குழந்தையும் ஹனகல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :