Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

By: vaithegi Sat, 06 Aug 2022 10:14:56 AM

மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர் : ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் முழுவதும் மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 77 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 1 லட்சத்து 57 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 400 கனஅடியும் என மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு கள் மற்றும் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் காவிரி கடல் போல காட்சி அளிக்கிறது. மேட்டூரில் வருவாய் துறையினர் ஒலி பெருக்கி மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

mettur,open,dam ,மேட்டூர் ,திறப்பு ,அணை

மேலும் காவிரியில் ஏற்பட்டுள்ள தொடர் வெள்ளப்பெருக்கால் கோட்டையூர், பண்ணையூர் பரிசல் துறைகளில் இருந்து படகுகள், பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடி பாலாறு, ஏமனூர், செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி, சேத்துக்குழி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தொடர்ந்து முகாம்களில் முடங்கி உள்ளனர். மேலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் தொடர்ந்து காவிரி கரையில் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய நீடிக்கிறது.

இதனால் கரை புரண்டோடும் வெள்ள நீரின் அருகில் செல்லவும், கால்நடைகளை குளிப்பாட்டவும, அருகில் சென்று செல்பி எடுக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது தக்க கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம், மொளசி, ஜோடர்பாளையம், பரமத்திவேலூர், மோகனூர் ஆகிய பகுதிகளில் டி.எஸ்.பி.க்கள். தலைமையில் அதிகாரிகள் 8 குழுக்களாக பிரிந்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags :
|
|