Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் அதிபரால் கூறப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை

உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் அதிபரால் கூறப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை

By: Karunakaran Wed, 02 Sept 2020 11:28:49 AM

உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் அதிபரால் கூறப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை

2001 முதல் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, ஆப்கானிஸ்தான் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்க ஒப்புக்கொண்டது. இதனால் ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினர் திரும்பப்பெறப்பட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் படி, ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5 ஆயிரம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்தான் ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவிப்போம் என அவர்கள் கெடு விதித்தனர்.

release,400 taliban terrorists,most dangerous,afghanistan president ,விடுதலை, 400 தலிபான் பயங்கரவாதிகள், மிகவும் ஆபத்தானவர்கள், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி

ஆப்கானிஸ்ஸ்தான் சிறையில் பலகட்டங்களாக 4 ஆயிரத்து 600 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஒப்பந்தத்தில் எஞ்சிய 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த பயங்கரவாதிகள் விடுதலைக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இந்த பயங்கரவாதிகள் நமக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கே ஆபத்தானவர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த 400 பயங்கரவாதிகளையும் விடுதலை செய்ய ஆப்கானிஸ்தானின் முக்கிய தலைவர்கள் அனுமதியளித்தனர். பயங்கரவாதிகளில் சுமார் 200 பேரை ஆப்கானிஸ்தான் அரசு கடந்த திங்கள் கிழமை விடுதலை செய்துள்ளனர். பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டதையடுத்து பதிலுக்கு தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையின் கமாண்டர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எஞ்சிய பயங்கரவாதிகளும் கூடிய விரைவில் விடுதலை செய்யப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும்

Tags :