Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6000 கனஅடி நீர் திறப்பு ..பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6000 கனஅடி நீர் திறப்பு ..பொதுமக்களுக்கு எச்சரிக்கை

By: vaithegi Thu, 23 Nov 2023 3:39:41 PM

வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6000 கனஅடி நீர் திறப்பு  ..பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: அணையிலிருந்து வினாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவிக்கப்பட்டு உள்ளது ....தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள ராஜவாய்க்கால் மதகுகள் அடைக்கப்பட்டு அதில் உள்ள தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.

அதாவது, தேனியிலிருந்து பெரியாறு பாசன கால்வாய், திருமங்கலம் மற்றும் மேலூர் குடிநீர் தேவைக்காக 2099 கனஅடி நீர் வெளியேறியது.

public,waikai dam,alert ,பொதுமக்கள்,வைகை அணை,எச்சரிக்கை

இந்நிலையில், தற்போது மதுரை மாவட்ட பாசன வசதிகளுக்காக அணையிலிருந்து வினாடிக்கு மொத்தம் 6099 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த நீர் அணையில் உள்ள 7 பெரிய மதகுகள் வழியாக வெளியேறுவதால் மதுரை மாவட்ட மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்று பாலம் வழியாக கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது.

Tags :
|