Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான ஆண்டு திட்டத்திற்கான அட்டவணையை வெளியீடு

தெலுங்கானாவில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான ஆண்டு திட்டத்திற்கான அட்டவணையை வெளியீடு

By: vaithegi Thu, 30 June 2022 7:51:45 PM

தெலுங்கானாவில்  2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான ஆண்டு திட்டத்திற்கான அட்டவணையை  வெளியீடு

தெலுங்கானா: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான ஆண்டு திட்டத்திற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதில், அடுத்த கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கவிருக்கும் தேதிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்களும் தேதிகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் தேதிகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

summer vacation,telangana ,கோடை விடுமுறை,தெலுங்கானா

இந்த வகையில் தெலுங்கானா மாநில பள்ளிக் கல்வி இயக்குநரகம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான கல்விக் காலெண்டரை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிகள் தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்குள் முடிக்க வேண்டும். மேலும் நடப்பு கல்வியாண்டில் 230 வேலை நாட்களில் பள்ளிகள் செயல்படும். இதையடுத்து சுருக்க மதிப்பீடு-1 தேர்வுகள் நவம்பர் 1 முதல் 7 வரையிலும், சுருக்க மதிப்பீடு -II தேர்வுகள் ஏப்ரல் 10 முதல் 17 வரையிலும் நடைபெறும். மேலும் பத்தாம் வகுப்புக்கான இறுதித் தேர்வுகள் பிப்ரவரி இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் SSC பொதுத் தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என கல்வி நாட்காட்டி குறிப்பிடுகிறது . இதையடுத்து கல்வி நாட்காட்டியின்படி, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 9 வரை,14 நாட்கள் தசரா விடுமுறையும், டிசம்பர் 22 முதல் 28 வரை மிஷனரி பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறையும், ஜனவரி 13 முதல் 17,2023 வரை 5 நாட்களுக்கு சங்கராந்தி விடுமுறையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :