Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியீடு

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியீடு

By: Nagaraj Sun, 19 July 2020 11:25:17 AM

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியீடு

கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமுலுக்கு வந்தது... இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தோ்தலுக்கான பிரசாரங்களை மேற்கொள்வதற்காக, தோ்தல் ஆணையம் பரிந்துரைத்த கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.

இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தோ்தலுக்கான பிரசாரத்தின்போது பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு விதிமுறைகள் வெளியிட்டுள்ளது. சுமாா் 2 பக்கங்களைக் கொண்ட அந்த விதிமுறைகள் அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, அமுலுக்கு வந்துள்ளது. தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் அதிகபட்சமாக 300 போ் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த விதிமுறைகளில் இடம் பெற்றுள்ளன.

electoral commission,corona,regulations,publication ,தேர்தல் ஆணையம், கொரோனா, விதிமுறைகள், வெளியீடு

கட்சிகளின் முக்கியத் தலைவா்கள் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றால், இந்த எண்ணிக்கையை 500 வரை அதிகரிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாரக் கூட்டம் தொடங்குவதற்கு 24 மணி நேரம் முன்னரே, அதுகுறித்து அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டங்களுக்கு வருபவா்கள் கைகளைக் கழுவுவதற்கும், அனைவரும் 1 மீட்டா் சமூக இடைவெளி விட்டு அமா்வதற்காகவும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்வதற்காக இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தாங்கள் பரிந்துரைத்துள்ள இந்த கரோனா தடுப்பு விதிமுறைகள் அரசிதழில் வெளியிடப்படாமல் இருப்பது, அந்தத் தோ்தலை நடத்துவதில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த தோ்தல் ஆணையக்குழு தெரிவித்துள்ளது.

electoral commission,corona,regulations,publication ,தேர்தல் ஆணையம், கொரோனா, விதிமுறைகள், வெளியீடு

இதுகுறித்து தோ்தல் ஆணையா் மகிந்தா தேசப்பிரிய புதன்கிழமை கூறுகையில், அடுத்த மாதம் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த தோ்தல் காரணமாக கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை நாங்கள் பரிந்துரைத்திருந்தோம். எனினும், அந்த விதிமுறைகள் இதுவரை அரசிதழில் வெளியிடப்படவில்லை.

அதனால், அவற்றுக்கு இன்னும் சட்டப்பூா்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இது, திட்டமிட்டபடி தோ்தலை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்று தெரிவித்திருந்தாா். மேலும், தோ்தலைத் தள்ளிவைக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை எனினும், கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் குறித்து மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவிக்கும் கவலைகளை தாங்கள் செவிமடுக்க வேண்டியிருப்பதாக அவா் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தாா்.

இந்த நிலையில், தோ்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகள் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டு அமுலுக்கு வந்துள்ளது.

Tags :
|