Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 6 முதல் 12 வரை அரசு பள்ளியிலேயே படித்து IIT, IIM உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவு தமிழக அரசே முழுமை ஏற்கும் .. நிதிநிலை அறிக்கை வெளியீடு

6 முதல் 12 வரை அரசு பள்ளியிலேயே படித்து IIT, IIM உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவு தமிழக அரசே முழுமை ஏற்கும் .. நிதிநிலை அறிக்கை வெளியீடு

By: vaithegi Thu, 01 Sept 2022 7:40:09 PM

6  முதல் 12 வரை  அரசு பள்ளியிலேயே படித்து IIT, IIM உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவு  தமிழக அரசே முழுமை ஏற்கும் ..  நிதிநிலை அறிக்கை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பலவிதமான நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் அவ்வப்போது புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதை அடுத்து சமீபத்தில் கூட அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு தொடர இருக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு கூடிய விரைவில் மாணவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 செலுத்தப்பட இருக்கிறது.

financial statements,government of tamil nadu ,நிதிநிலை அறிக்கை,தமிழக அரசு

இந்த நிலையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதாவது, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைக்கும் அரசு பள்ளியிலேயே படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழக அரசே முழுமையாக ஏற்கும் என்று நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் இப்புதிய அரசாணை பல்வேறு அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :