Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்லூரி தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கல்லூரி தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

By: Monisha Sat, 12 Sept 2020 11:45:27 AM

கல்லூரி தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் நடைபெற இருந்த முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகளைத் தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடித்துவிட வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

அந்த அறிவிப்பின்படி அனைத்துப் பல்கலைக் கழகங்களும் இறுதியாண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணைகளை வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் இறுதியாண்டு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், மாணவர்கள் தங்கள் செல்போன் எண், இ-மெயில் முகவரியை பல்கலைக்கழக இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

இதைதொடர்ந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் செய்யப்பட்ட மாற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

corona virus,college,semester exam,corona symptom,exam center ,கொரோனா வைரஸ்,கல்லூரி, செமஸ்டர் தேர்வு,கொரோனா அறிகுறி,தேர்வு மையம்

அதன்படி தொற்று அறிகுறி கொண்ட மாணவர்களைத் தனிமைப்படுத்தித் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை அறிகுறி உடைய மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்தால் அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என விதிமுறைகளில் கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் தொற்று உடைய மாணவர்கள் எப்போது உடல் ரீதியாகத் தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுகிறாரோ அப்போது தேர்வை எழுதக் கல்வி நிறுவனம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும், எனினும் அத்தகைய மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள திட்டப்படி தேர்வுகளை நடத்தும் அதிகாரிகள் முடிவு செய்யலாம்.

கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வசிக்கும் ஆசிரியர்களுக்கும் தேர்வர்களுக்கும் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை. அவர்களுக்கு பின்னர் ஒரு தேதியில் தேர்வை எழுதக் கல்வி நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். முகக்கவசம், சானிடைசர்கள், சோப், சோடியம் ஹைப்போக்ளோரைட் கரைசல் ஆகியவற்றைக் கல்வி நிறுவனங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்களும் தேர்வர்களும் தங்களுடைய உடல்நிலை குறித்து சுய அறிவிப்புப் படிவத்தைச் சமர்பிக்க வேண்டும். தவறினால் தேர்வு மையங்களுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதியில்லை.

corona virus,college,semester exam,corona symptom,exam center ,கொரோனா வைரஸ்,கல்லூரி, செமஸ்டர் தேர்வு,கொரோனா அறிகுறி,தேர்வு மையம்

தொற்று அறிகுறி இல்லாத ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வறைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும். அவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியம். தேர்வறைக்குள் முகக்கவசத்தைக் கழற்றாமல் அனைத்து நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும். தேர்வு மையங்களுக்குள் கூட்டம் ஏற்படுவதை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும். பேனா-தாள் சார்ந்த தேர்வுகளுக்கு கேள்வித்தாள்களையும் விடைத்தாள்களையும் கொடுப்பதற்கு முன்னால் கண்காணிப்பாளர் தன் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல அவற்றை வாங்கும் முன் மாணவர்களும் தங்கள் கைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

வினா விடைத்தாள்களை விநியோகிக்கும் முன்னரும் எண்ணிப் பார்க்கும்போதும் எச்சில் தொட்டு பணியைச் செய்வது கூடாது. விடைத்தாள் சேகரிப்பு, பேக்கிங் என ஒவ்வொரு கட்டத்திலும் கைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். அடுத்து குறைந்தபட்சமாக 72 மணி நேரங்களுக்குப் பிறகே விடைத்தாள்களைப் பிரிக்க வேண்டும். தேர்வின்போது தேர்வர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டால் அவரைத் தனிமைப்படுத்துவதற்கெனத் தனியாக ஓர் அறை அருகிலேயே இருப்பது அவசியம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

Tags :