Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதற்கட்டமாக 13 நகரங்களில் 5G சேவை தொடங்கப்படும் .. அந்த நகரங்களுக்கான பட்டியல் வெளியீடு

முதற்கட்டமாக 13 நகரங்களில் 5G சேவை தொடங்கப்படும் .. அந்த நகரங்களுக்கான பட்டியல் வெளியீடு

By: vaithegi Wed, 24 Aug 2022 8:05:07 PM

முதற்கட்டமாக 13 நகரங்களில் 5G சேவை தொடங்கப்படும்  ..  அந்த நகரங்களுக்கான பட்டியல்  வெளியீடு

இந்தியா : ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை ஏலத்தில் பெற்றுள்ளனர். இந்தியாவில் 4G நெட்வொர்க்கை காட்டிலும் 5G நெட்வொர்க் 10 மடங்கு வேகமாக இருக்கும்.

ஆரம்பத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டில் 5G சேவை அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) தொடக்க விழாவின் போது செப்டம்பர் 29 ஆம் தேதி இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5g service,indian mobile congress ,5G சேவை, இந்திய மொபைல் காங்கிரஸ்

விரைவில் இந்தியாவில் 5G சேவையை அறிமுகம் செய்வதற்கான வேலைப்பாடுகளை தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் செய்து வந்தனர். இதில் முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 13 நகரங்கள் அதி வேகமான 5G இணைய சேவையை பெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு மற்ற நகரங்களிலும் 5G இணைய சேவை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து முதற்கட்டமாக 5G இணைய சேவையை பெற இருக்கும் நகரங்கள் இதோ, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் 5G இணைய சேவை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை தயாராக வைக்கும்படி தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags :