Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான என்.எம்.எம்.எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான என்.எம்.எம்.எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

By: vaithegi Tue, 28 June 2022 4:46:41 PM

தமிழகத்தில்  8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான  என்.எம்.எம்.எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம்: தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் தமிழகத்தில் திறமையான மாணவர்களைக் கண்டறியும் நோக்கிலும் அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தேர்வுகள் இயக்ககம் தேசிய மீன்ஸ்-கம்-மெரிட் ஸ்காலர்ஷிப் திட்ட தேர்வை நடத்தி வருகிறது.

exam results,8th class ,தேர்வு முடிவுகள்,8ஆம் வகுப்பு

இத்தேர்வானது 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கீழ் பயன் பெற விரும்பும் மாணவர்களுக்கு சில நிபந்தனைகளும் உள்ளது. பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு ரூ. 1,50,000 க்குள் இருக்க வேண்டும்.

மேலும், உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வில் குறைந்த பட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் எட்டாம் வகுப்பு தேர்வில் சமமான தரம் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில வேண்டும். 2022 – 2023 ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் பட்டியலும் தற்போது வெளியாகி உள்ளது.

Tags :