Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடை வெயிலின் தாக்கம் இருக்கிற நிலையில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு

கோடை வெயிலின் தாக்கம் இருக்கிற நிலையில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு

By: vaithegi Sun, 21 May 2023 11:15:50 AM

கோடை வெயிலின் தாக்கம் இருக்கிற நிலையில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கோடை காலத்தின் காரணமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பநிலை அதிகமாக காணப்படுகிறது.

இதையடுத்து தற்போது மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் மழையை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

rainy,chennai ,மழை ,சென்னை

கடந்த 10 நாட்களாகவே 40+C வெப்பநிலையுடன் காணப்பட்ட திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் சில பகுதிகளில் வட-தெற்கு நகரும் புயல்களால் இன்று மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் புயல் காற்று நகர்ந்து வருகிறது. எனவே இன்று வட உள் தமிழ்நாடு மற்றும் மேற்கு தமிழ்நாடு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த புயல் காற்றின் காரணமாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், மேற்கு திருவண்ணாமலை பகுதியில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|