Advertisement

அக்டோபர் ஜிஎஸ்டி வசூல் விவரம் வெளியீடு

By: vaithegi Thu, 02 Nov 2023 11:06:52 AM

அக்டோபர் ஜிஎஸ்டி வசூல் விவரம் வெளியீடு


புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது. கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1,72,003 கோடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து இதற்கு முன்பாக, நடப்பாண்டு ஏப்ரலில் தான் அதிகபட்சமாக ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது. அதற்குப்பிறகு, 2-வது அதிகபட்சமாக அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

இந்த மொத்த வசூலில், மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ.30,062 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.38,171 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ரூ.91,315 கோடியாகவும், செஸ் ரூ.12,456 கோடியாகவும் இருந்தன.

gst,collection,union ministry of finance ,ஜிஎஸ்டி ,வசூல் ,மத்திய நிதி அமைச்சகம்

இதையடுத்து வருவாய் பங்கீட்டின்படி, அரசு ஐஜிஎஸ்டியிலிருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.42,873 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.36,614 கோடியும் ஒதுக்கியது. வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு, 2023 அக்டோபரில் மத்திய மற்றும் மாநிலங்களுக்கான மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ.72,934 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ரூ.74,785 கோடியாகவும் இருந்தது.

மேலும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் 13 சதவீதம் உயர்ந்துள்ளது என அந்த அறிக்கையில் நிதியமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.


Tags :
|