Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரிட்டன் மன்னர் சார்லஸின் அதிகாரப்பூர்வ உருவப்படம் வெளியீடு

பிரிட்டன் மன்னர் சார்லஸின் அதிகாரப்பூர்வ உருவப்படம் வெளியீடு

By: Nagaraj Tue, 09 May 2023 9:02:36 PM

பிரிட்டன் மன்னர் சார்லஸின் அதிகாரப்பூர்வ உருவப்படம் வெளியீடு

பிரிட்டன்: அதிகாரப்பூர்வ படம் வெளியீடு.. .பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த 6-ம் தேதி முறைப்படி முடிசூட்டப்பட்ட நிலையில், மன்னரின் முதல் அதிகாரப்பூர்வ உருவப்படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 4 புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தனி உருவப்படத்திற்காக, பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள சிம்மாசன அறையில் முழு அலங்காரத்தில், இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்தை மன்னர் சார்லஸ் அணிந்துள்ளார்.

members,family,king,official,queen,portrait ,உறுப்பினர்கள், குடும்பம், மன்னர், அதிகாரப்பூர்வம், ராணி, உருவப்படம்

சிலுவையுடன் கூடிய இறையாண்மை உருண்டை மற்றும் செங்கோலை கைகளில் பிடித்துள்ளார்.

குயின் மேரியின் கிரீடம் மற்றும் எஸ்டேட் ரோப் அணிந்த ராணி கமிலாவின் தனி உருவப்படமும், மன்னரும், ராணியும் இருக்கும் புகைப்படமும், சிம்மாசன அறையில் பணிபுரியும் அரச குடும்ப உறுப்பினர்களுடன் மன்னர் மற்றும் ராணி இருக்கும் குழுப்புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
|
|
|